அ.தி.மு.க பொதுக்குழு முடிந்ததும் 8 அமைச்சர்கள் ராஜினாமா? எடப்பாடி அரசுக்கு ஆப்பு ரெடி

edappadi-palanisamy
அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தினகரன்.

தினகரன் தரப்பிலிருந்து ‘‘எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ள எம்.எல்.ஏக்கள் 19 பேர் தவிர கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் மூன்று பேரின் ஆதரவும் எங்களுக்கே உள்ளது. சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர்கள், தினகரனுக்கு எதிராகப் பேசா விட்டாலும், ஒருகட்டத்தில் அவர்களும் எங்களிடம் வந்துவிடுவார்கள்” என்கிறார்கள்.

‘‘எடப்பாடி நடத்தும் பொதுக்குழுவில், சசிகலாவை நீக்குவதாக அறிவித்தால் உடனடியாக 8 அமைச்சர்கள் உடனே பதவியை ராஜினாமா செய்வார்கள். அவர்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிடுவார்கள்’’ என்றும் தகவல் சொல்கிறார்கள்!

எடப்பாடி பொறுத்தவரை டெல்லி உதவியுடன் நிலைமையைச் சமாளிக்கலாம், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்!

Leave a Response