ஜனாதிபதியை சந்திக்க நோ அனுமதி…பாண்டிச்சேரி ரிசார்ட்டில் 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்!

sundar
பாண்டிச்சேரி, சின்ன வீராம்பட்டினம், ‘விண்ட் பிளவர்’ என்கின்ற சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கைவிரித்த நிலையில், ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு, கிடைக்கவில்லை. இதனால், புதுச்சேரியில் தங்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பத்தினரையும் சந்திக்க முடியவில்லை. தொகுதியிலும் எதிர்ப்பு கிளம்பி விட்டதால், ‘மூட அவுட்’ ஆகியுள்ளனர். இதனால், ‘தொகுதிக்கும், வீட்டிற்கும் செல்ல வேண்டும்’ என, அனுமதி கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

நேற்று காலை, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், சோளிங்கர் எம்.எல்.ஏ., பார்த்திபன் இருவரும் தனித்தனியாக காரில் புறப்பட்டு சென்றனர். இருவரும், விடுதியில் இருந்து, ‘எஸ்கேப்’ ஆகிவிட்டதாக செய்தி பரவியது. மதியம், 12:30 மணிக்கு, தங்க தமிழ்ச்செல்வன், வெளியே வந்தார். அப்போது, ”சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ., தினகரனை சந்திக்க சென்னை சென்றுள்ளார். எம்.எல்.ஏ., பார்த்திபன், பஞ்சவடீ கோவிலுக்கு சென்றுள்ளார்,” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, தங்க தமிழ்ச்செல்வன் புதுச்சேரி விமான நிலையத்திற்கு சென்று, ஐதராபாத் செல்ல, 26 டிக்கெட் காலியாக உள்ள நாள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் விசாரித்து வந்துள்ளனர். அதனால், அவர்கள் விமானத்தில் ஐதராபாத் சென்று, அங்கிருந்து டில்லிக்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.

Leave a Response