எல்லாம் எனக்குத் தெரியும் என்றார் ஆளுநர்! -துரைமுருகன் பேட்டி!

dur
சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

காலை 10.30 மணிக்கு கவர்னர் நேரம் ஒதுக்கியதை அடுத்து, சட்டசபை திமுக துணை தலைவர் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.,க்கள், விஜயதாரணி தலைமையிலான காங்., எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர். அவர்களுடன் திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் சென்றனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும் அறிவித்துள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

இதனால் சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி திமுக மற்றும் காங்., தரப்பில் கவர்னரிடம் மனு அளித்தனர்.

கவர்னரை சந்தித்த பின், துரைமுருகன் அளித்த பேட்டி:-

மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய கூடாது என்பது குறித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துடன் கவர்னரை சந்தித்தோம். முதல்வர் எடப்பாடி வசம், 113 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எனவே, சட்டசபையை உடனடியாக கூட்டி, முதல்வர் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கவர்னரிடம் கூறினோம். நான் எல்லாவற்றையும் அறிவேன்.

இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் கூறினார்.

Leave a Response