உங்கள் குழந்தைக்கு ஜீரணக்கோளாறா? எளிதான கை வைத்தியம் இதோ!

baby jee
பிறந்து ஒரு சில வாரங்களோ மாதங்களோ ஆன குழந்தைகளுக்கு வாந்தி எடுப்பது என்பது சாதாரண பிரச்சனைதான்.

பால் குடித்ததும் ஒரு சில நிமிடங்களிலேயே குழந்தை அதனை வாந்தி எடுத்து விடுவதால் தாய்மார்களுக்கு கவலை ஏற்படுகிறது.

இப்படியே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட வேண்டாம்.

இதனை தீர்க்க எளிதான கை வைத்தியம் உள்ளது.

பொதுவாக பால் குடிக்க வைத்ததும் குழந்தையை தோள் மீது போட்டு கழுத்துப் பகுதியில் இருந்து முதுகு வரைத் தட்டிக் கொடுப்பது நல்லது.

இதனால் பால் வாயில் இருந்து இறைப்பைக்கு சீராக சென்று சேரும். குழந்தை படுத்துக் கொண்டே இருப்பதால் சரியாக போய்ச் சேராமல் போவதால்தான் பெரும்பாலும் வாந்தி ஏற்படுகிறது.

முதலில் பால் குடித்ததும் இதுபோன்று தட்டிவிடுவதால் வாந்தி எடுப்பது பாதி அளவிற்கு குறைகிறது. அப்படியும் ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தால்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளில் ஒரு முறையேனும் தண்ணீர் கொடுப்பது அவசியம். ஒரு சிறு வெள்ளைத் துணியில் 15 சீரகம் அளவிற்கு போட்டு அதனை முடிந்துவிட வேண்டும். அதனை குடிக்கக் கொடுக்கும் சுடு தண்ணீரில் போட்டு வைத்து பின்னர் எடுத்து விட வேண்டும்.

அந்த தண்ணீர் லேசாக கரும் சிவப்பு ‌நிறத்தில் இருக்கும். அதனைக் குடிக்கக் கொடுத்தால் குழந்தைக்கு ஜீரணக் கோளாறும் நீங்கும். வாந்தியும் குறையும்.

வெளியில் பயணம் செல்லும் போது குழந்தைகளுக்கு இதுபோன்ற நீரை எடுத்துச் சென்றால் வழியில் வாந்தி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிக்கும் நீரில் சீரகம் கொதிக்க வைத்துக் குடித்தாலும் குழந்தைக்கு நல்லது

Leave a Response