ஓ.பி.எஸ் இன்று மாலை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை!

ops1

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக முதல்வர் பழனிச்சாமி நேற்று மாலை அறிவித்தார்.

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைவதற்கு ஓ.பி.எஸ் அணியினர் விதித்த நிபந்தனைகளை முதல்வர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டுவிட்டார், இந்நிலையில் முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, அணியின் மூத்த நிர்வாகிகளுடன் பன்னீர் செல்வம் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

ஆலோசனைக்கு பிறகு இரு அணிகள் இணைவது தொடர்பாக அறிவிப்பை பன்னீர் செல்வம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response