சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று துவக்கி வைத்த நடமாடும் நியாய விலைக்கடை

தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக்கடை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு துவக்கிவைத்தார். அதைத்தொடர்ந்து  மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. சென்னை அம்பத்தூர் பகுதிக்குட்பட்ட முகப்பேர் கங்கைஅம்மன்நகரில் அம்பத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.அலெக்ஸாண்டர் இத்திட்டத்தை இன்று துவக்கிவைத்தார்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, ஆகவே இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்விடுத்தார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்கள் மீது விரைவில் தீர்வுகாண ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.

Leave a Response