ரஷ்யா மீது பொருளாதாரத் தடை, ட்ரம்ப் அதிரடி!

tramp

உக்ரைன் மற்றும் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், உளவுத் துறை அமைப்புகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இவை தவிர ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் நிதியுதவி பெறுவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கிவிட்டதாக புதன்கிழமை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா மட்டுமன்றி, ஈரான், வடகொரியா மீதும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் சட்ட மசோதாக்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Response