ஈரான்-ஈராக் எல்லையில் நில நடுக்கம்! 140 பேர் பலி !

201711130636207056_Iranians-report-at-least-61-dead-300-injured-from-quake_SECVPF
ஈரான் -ஈராக் எல்லையை ஒட்டியுள்ள பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஈரானில் உள்ள 14 முக்கிய பகுதிகள் குலுங்கின. வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், 140 பேர் பலியாகியுள்ளதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. 1000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஈரானிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் உள்ள புறநகர் பகுதியான ஹலப்ஜா நகரில் சேதம் அதிகம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Response