ஈரானுக்கு கள்ளத்தனமாக ஏவுகணைகள் ஏற்றுமதி.. மூன்றாம் உலகப்போருக்கு ஆயத்தமாகும் வடகொரியா..

625.0.560.350.160.300.053.800.668.160.90

ஈரானுக்கு கப்பல்கள் மூலம் கள்ளத்தனமாக வடகொரியா ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யும் கிம் ஜாங் உன்னின் செயல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகை செய்யும் என அணு ஆயுத வல்லுநர் கோர்டான் சங் தெரிவித்துள்ளார். “நியூக்ளியர் ஷட்டவுன்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், கிழக்காசிய நாடுகளில் அணு ஆயுத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் கோர்டான் சங் (Gordon Chang) என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஈரானுக்கு கப்பல்கள் மூலமாக வடகொரியா கள்ளத்தனமாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை அமெரிக்கா தடுக்க வேண்டும். இதனை நாம் அனுமதிக்க கூடாது. இதை அனுமதித்தால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகை செய்யும். ஐ.நா தனது விதிமுறைகளை செயல்படுத்தா விட்டாலும், அமெரிக்கா செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுத கொள்கையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு நடந்து வரும் நிலையில், இந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Leave a Response