ஆண்கள் மட்டும் பங்கேற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா !

kaalaiyaar
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாந்தாளி கண்மாயில் 200 ஆண்டுகள் பழமையான தர்மமுனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடித்திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. இந்த திருவிழாவில் 80 ஆடுகள், 120 கோழிகள் நேர்த்திக்கடன் செலுத்தி, படையலிடப்பட்டு நேற்று காலை அன்னதானம் நடைபெற்றது. இதில் காளையார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஏற்பாடுகளை மாந்தாளி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Leave a Response