‘பிரகாஷ்ராஜுக்கு வில்லனா பிள்ளைப் பூச்சியா?’

nibunan_640x480_81494240623

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்புல 150வது படம்!

படத்துல, ஆக்ஷன் கிங்குக்கு எப்பவுமே அட்டகாசமா பொருந்துற போலீஸ் கேரக்டர்!

ஹீரோ போலீஸா வர்றார்னா பல வருஷமா டெம்ப்ளேட்ல துருப்பிடிச்சு கிடக்குற கதை பக்கம் உப்புக் காகிதத்தோட போறதுதானே தமிழ் சினிமா வழக்கம்?
அர்ஜுனைக் கூட்டிக்கிட்டு அப்படித்தான் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்திருக்கார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

சிட்டில தொடர்ச்சியா கொலைங்க நடக்குது. போட்டுத் தள்றவன் வெட்டிச் சாய்ச்சோம், சுட்டுத் தள்ளினோம்னு போகாம செய்ற கொலைகள்ல சைக்கோத்தனம் காட்டுறான். அப்படி என்னத்தைக் காட்டினான், அவனை போலீஸ் எப்படி துப்பறிஞ்சுப் பிடிக்குதுங்கிறதுதான் கதை.

அர்ஜுனுக்கு உதவியா வர்றாங்க போலீஸ் அதிகாரிங்க பிரசன்னாவும் வரலெட்சுமியும்.
வரலெட்சுமி இருக்குற ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும் ஒரு ஆக்ஷன் பிளாக் வெச்சா நல்லாருக்காது? வெச்சிருக்காரு டைரக்டரு. அந்த என்கவுன்டர் சீன்லாம் நல்லாத்தாம்யா இருக்கு!

‘லாஜிக்கையெல்லாம் கன்டெய்னர்ல பூட்டி கடலுக்குள்ள வீசிட்டு வந்திருக்கோம். அதனால அது எப்படி, இது எப்படி கேள்வியெல்லாம் கேட்காம பார்த்துட்டு போங்க’ னு சொல்லாம சொல்லுது ஒவ்வொரு சீனும்!

கொலைங்களைச் செய்றது அர்ஜுன் கூடவே சுத்துற பிரசன்னாவா? சொந்த தம்பியா? இல்லே அர்ஜுனேவா? இப்படி ஆடியன்ஸை பலவிதமா யோசிக்க வெச்சு கடைசில அதெல்லாம் கிடையாதுனு ஒருத்தரைக் கொண்டாந்து நிறுத்துறதெல்லாம் ‘டிவிஸ்ட்’தான் ஒத்துக்கிடுதோம்.

அப்படி நிறுத்துன ஆசாமிதே பாவம், ‘பிரகாஷ்ராஜுக்கு வில்லனா பிள்ளைப் பூச்சியா?’ங்கிறபடி இருக்காப்ல!

மீஸிக் டைரக்டரு புதுசாம். பேரு நவீன். ஆர்.ஆர்.ல கலக்கிருக்காப்டி!

டெல்லி ஆருஷி கொலை வழக்கை கதைக்குள்ள இழுத்துப் போட்டது, சைக்கோ கொலைகாரன் குறி வெச்சதுல ஹீரோவையும் சேர்த்து விட்டதுனு யோசிச்சதுல இருந்த புத்திசாலித்தனத்தை ஸ்கிரீன்பிளேல காட்டிருந்தா படத்தை ஸ்கிரீன் பண்ற இடத்துலயெல்லாம் கூட்டம் குவிச்சிருக்கலாம்!

Leave a Response