உங்க ஸ்மார்ட்போன் தண்ணில விழுந்தால் செய்ய வேண்டியது !

watter
ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்வை தற்போது கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிப் போய்விட்டது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்? இதுபோன்ற சமயங்களில் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து இங்கே காணலாம்.

1 – முற்றிலும் தண்ணீரில் மூழ்கி ஸ்மார்ட்போன் பாதிக்கப்பட்டால், செல்போன் நிறுவனத்தில் வாரண்டியை இழக்க நேரிடும். நீரில் மூழ்கினால், நிறுவனத்தார் பராமரிப்பு செலவுகளை ஏற்க மாட்டார்கள். வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறி, பராமரிப்பாளர்களை ஏமாற்ற இயலாது. ஏனெனில் தண்ணீரில் விழுந்த செல்போனின் ’இம்மர்சன் சென்சார்’ நிறம் மாறியிருக்கும்.

2 – உடனடியாக தண்ணீரில் இருந்து செல்போனை எடுத்து, துடைத்துவிட வேண்டும். பின்னர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யவும். இதையடுத்து டிஸ்ஸியூ பேப்பர் அல்லது கிச்சன் டவலால் சுற்றி வைக்க வேண்டும். மேலும் செல்போனில் உள்ள சிம் கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றை நீக்கவிடவும்.

3 – முக்கியமாக செல்போனை ஈரப்பதம் உறிஞ்சும் இடத்தில் வைக்க வேண்டும். அதில் அரிசி நிறைந்த பாத்திரத்தில் செல்போனை வைப்பது சிறந்தது. குறைந்தபட்சம் 28-48 மணி நேரம் வரை அதில் வைக்க வேண்டும்.

4 – ஹேர் டிரையர் மூலம் செல்போனை சுத்தப்படுத்த நினைத்தால் விபரீதமாக முடிந்துவிடும். அதிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான வெப்பத்தால் எலக்ட்ரானிக் உபகரணங்கள் வீணாய் போய்விடும். மேலும் ரேடியேட்டர், ஹாட் ஓவன் போன்றவற்றின் அருகே செல்போனை வைக்க கூடாது.

5 – ஒருவேளை உப்பநிறைந்த கடல்நீரில் விழுந்துவிட்டால், உடனே தூய நீரில் கழுவி விட வேண்டும். ஏனெனில் உப்பு நீர் எலக்ட்ரானிக் பாகங்களை பாதித்துவிடும்.

6 – ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆன் ஆகியவுடன், கம்யூட்டர் உடன் இணைத்து அனைத்து தகவலையும் பாதுகாப்பாக பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Response