ரகசிய கேமரா! எப்படி கண்டறிவது? இதோ உங்களுக்கான டிப்ஸ்….

dress
இந்த காலகட்டத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை என்பது நடக்கும் நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குளியல் அறை முதல் அவர்கள் தங்கும் அறை வரை எங்கு பார்த்தாலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொள்ளாத பெண்கள் சிக்கலில் மாட்டுக்கொள்கிறார்கள்.

ரகசிய கேமரா இருப்பதை எப்படி கண்டறிவது? எப்போதும் வெளியில் சென்றால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துணிக்கடைக்கு செல்லும் போதும் சரி, ஹோட்டலுக்கு செல்லும் போதும் சரி உஷாராக இருக்க வேண்டும்.

பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவரான காரியங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

மொபைல் போன்:

துணிக்கடையின் உடை மாற்றும் அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போனிலிருந்து போன் செய்து பாருங்கள். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் கால் செய்து பாருங்கள். பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செயய் முடியாவிட்டால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கடிகாரம்

பொதுவாக ஹோட்டல் அறையில் கடிகாரங்கள், மேசை, செடிகள், புத்தகங்கள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இதனை கண்டறிவதற்கும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் கேமரா டிடெக்டர் பயன்படுத்துவது நல்லது.

கேமரா டிடெக்டர்:

நீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும் போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்..

கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்:

நாம் பயன்படுத்தும் அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்கவேண்டும். அவற்றில் கூட ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய

நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் ஒரு சிறப்பான கருவியாக மாறிக்கொண்டே வருகிறது. உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருக்கிறதா? இல்லையா என்பதை கூட எளிதில் கண்டறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response