பிரபல ஹாலிவுட் நடிகரால் ஹோட்டலில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாடிக்கையாளர்கள் !

ஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சன் இளம்பெண் ஒருவருடன் சேர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் மயாமி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அவர்கள் நள்ளிரவில் கழிவறைகளுக்கு அருகில் நின்று சிகரெட் பிடித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டலில் இருந்த ஃபையர் அலாரம் ஒலித்துள்ளது. ஃபையர் அலாரம் சப்தம் கேட்டு ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தனர்.

ஹோட்டலில் தீப்பிடித்துவிட்டது என்று நினைத்த அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று உடுத்திய உடையுடன் வெளியே ஓடியுள்ளனர். இவ்வளவு நடந்தும் ஓவன் வில்சனும், அந்த பெண்ணும் கழிவறையில் இருந்து டான்ஸ் ஆடிய படியே வெளியே சென்றுள்ளனர்.

ஓவன் வில்சனும், இளம்பெண்ணும் பொறுப்பின்றி நடந்து கொண்டது பலரையும் கோபம் அடையச் செய்துள்ளது.

Leave a Response