உணவு விலை உயர்த்தப்படாது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

gst

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட உணவக உரிமையாளர்கள் கலந்துகொண்ட ஜிஎஸ்டி குறித்த சிறப்புக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் தமிழக முழுவதிலும் இருந்து ஹோட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒரு சில இடங்களில் உணவு பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்துள்ளனர். அது தவறு என்பதால், தமிழகத்தில் எங்கும் உணவுபொருட்கள் விலை ஏற்றம் செய்யப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.

hotel

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உணவக உரிமையாளர்களும் உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். ஒருவேளை வரி குறைப்புக்கு பிறகும் யாரேனும் பழைய வரி விகிதங்களின்படி பணம் வசூலித்தால் அதுதொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 044-28591500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். பின்னர், தொடர்புடைய கடை உரிமையாளருக்கு தற்போதைய வரிவிகிதத்தை முறைப்படி வசூலிக்க அறிவுறுத்தப்படும்” என்றார்.

Leave a Response