பூட்டு உடைப்பு, போராட்டம் கலைப்பு, இயக்குனர் கைது!..

Kathipara_bridge
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சங்கிலி போட்டு சாலை மறியல் நடத்திய இயக்குநர் கெளதம் தலைமையிலான இளைஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

டெல்லியில் 31-வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சென்னை கிண்டியிலுள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கெளதமன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கத்திப்பாரா பாலத்தின் இருபுறங்களிலும் இரும்புச் சங்கிலியை கட்டி போராட்டக்காரர்கள், அந்த சங்கிலிக்கு பூட்டும் போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் சுமூக முடிவு வரவில்லை.

இதனைத் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட காவல்துறையினர், சாலையின் மத்தியில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களை பாலத்தின் ஓரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் சுத்தியலால், சங்கிலியில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர்.

பின்னர் இயக்குநர் கெளதமன் தலைமையிலான போராட்டகாரர்களை காவல்துறை கைது செய்தவுடன், கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து சீரானது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு அந்தப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுபோன்று ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தால் டெல்லியில் போராடிகொண்டிருக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடியகிவிடுமா, அல்லாது மத்திய அரசு பணித்து விடுமா,

Leave a Response