12ஆம் வகுப்பு மாணவன் கொலை ஸ்மார்ட்ஃபோனுக்காகவா?

Murdered
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் நாகராஜ் என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். செல்ஃபோனுக்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குமரேஷ் பாபு என்பவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகிறார். இவரின் மகன் நாகராஜ் (19) தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவருகிறார். செயின்ட் மேரிஸ் சர்ச்சுக்கு அருகே நாகராஜ் சடலமாக நாகராஜ் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய உடலின் தொடைப்பகுதியில் மட்டும் பெரிய காயம் உள்ளது. அந்த காயத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாணவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மீதான தாக்குதல் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை என்றும், ஸ்மார்ட் ஃபோனை திருடுவதற்காக தாக்கப்படும் போது உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். கொலை நடந்த இடம், காயம் எப்படி ஏற்பட்டது என்ற ரீதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அதிலிருந்து சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் பி.அருண் சக்தி குமார் கூறியிருக்கிறார்.

மேலும் வெவ்வேறு கோணங்களில் வழக்கை அணுகுவதாகவும், இது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு வண்டியூரில் உள்ள தனது சொந்தக்காரர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற குமரேஷ் பாபு, இரவு திரும்பும் போது தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். மாணவன் நாகராஜ் ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

Leave a Response