ஒலிப்பதிவு படிப்பில் சேரணுமா !

Recording-TruVoice
2017-18-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சத இடங்களும், வெளிமாநில மாணவர்களுக்கு 50 சத இடங்களும் ஒதுக்கப்படுகிறது. இப்படிப்பில் சேர்ந்து படிக்க, குறைந்தபட்சம் 2-ஆம் ஆண்டு பியூசிஅல்லது 12-ஆம் வகுப்பு (அறிவியல்) தேர்வில் தேர்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பெற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.100 கட்டணம் செலுத்தி, அதன் பற்றுச்சீட்டை முதல்வர் அலுவலகம், அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹெசரகட்டா அஞ்சல், பெங்களூரு-560088 என்ற முகவரியில் விண்ணப்பப் படிவங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 3 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் ஜூலை 22-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 080-28446672, 28466768 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response