கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி !

கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா நாளை மாலை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

எடியூரப்பா நாளை மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நீருபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை முக்கிய முடிவுகளை எடியூரப்பா எடுக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a Response