காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வாரியம், அல்லது ஆணையம் அல்லது குழு அமைக்க தயார் என நீர்வளத்துறை செயலர் யுபி சிங் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த தயார் என்றும் யுபி சிங் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அரசுகள், வரைவு திட்டம் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Response