தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும்-நாகராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:

ஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும். ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால் 16ம் தேதிக்கு பிறகு, தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் அவர்கள் படங்களை கர்நாடகாவில், வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்போது தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்துவதாக கூறியுள்ளார்.

இதனால், கர்நாடக வாழ் தமிழர்களிடையே பரபரப்பு சூழல் நிலவுகிறது.

Leave a Response