அதிக வருமானம் தரும் நிறுவனங்களின் பட்டியலில் 168வது இடம் பெற்றுள்ள ஐஓசி !

indianoil_3128319f
கடந்த 2016ல் அதிக வருமானம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து பார்ச்சூன் பத்திரிகை நடத்திய ஆய்வில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அந்த பத்திரிகையில் வெளியான செய்தி: இந்த பட்டியலில் ஆசியாவை சேர்ந்த 197 நிறுவனங்களும், வட அமெரிக்காவை சேர்ந்த 145 நிறுவனங்களும், ஐரோப்பாவை சேர்ந்த 143 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாட்டை சேர்ந்த 132 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவை சேர்ந்த 109 நிறுவனங்களும், ஜப்பானை சேர்ந்த 51 நிறுவனங்கள், தென் கொரியாவின் 15 நிறுவனங்களும் உள்ளன.

இந்த பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால், முதல் 200 இடத்திற்குள் இந்தியன் ஆயில் கார்பரேசன் மட்டுமே உள்ளது. இந்த நிறுவனம் 168 வது இடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் 203வது இடத்திலும், ஸ்டேட் வங்கி 217, டாடா மோட்டார்ஸ் 247, ராஜேஸ் ஏற்றுமதி நிறுவவனம் 295, பாரத் பெட்ரோலியம் 360, இந்துஸ்தான் பெட்ரோலியம் 384வது இடத்திலும் உள்ளது.வால்மார்ட் நிறுவனம் 485,873 டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த 3 இடங்களை சீனாவின் ஸ்டேட் கிரின், சின் ஓபெக் மற்றும் சீனா பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டொயோடா, வோக்ஸ்வோகன், ராயல் டச் ஷெல், பர்க் ஷைர் ஹத்வே, ஆப்பிள் மற்றும் எக்சான் மொபில் ஆகியவை 10 இடங்களுக்குள் உள்ளன.

Leave a Response