APJ அப்துல் கலாமின் பாடல் ‘கலாம்-சலாம்’ இசை வெளியீடு !

Dr_APJ_Abdul_Kalam
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் சென்னையில் நேற்று அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பு சார்பில் கலாம் சலாம் என்ற இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து மொழி, இனம் கடந்து நேசிக்கப்பட்டவர் கலாம் ஐயா என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவர் அப்துல் கலாம் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

கலாம் பதவியை நேசிக்கவில்லை என்றும் மாணவர்களை நேசித்தார் என்றும் வரைமுத்து குறிப்பிட்டுள்ளார். விழாவில் கலாமுடன் ஒன்றாக பணியாற்றிய அனுபவத்தை குறித்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பகிர்ந்துகொண்டார். ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்தாலும் மாணவர்களும் சாமானியர்களும் எளிதில் அணுகும் வகையில் இருந்ததாக சுவாமிநாதன் தெரிவித்தார். இசை குருந்தகட்டை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

Kalam Salaam http://www.hungama.com/album/kalam-salaam/28165168/

Leave a Response