2.0 ரிலீஸ் எப்போது? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

2.0

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வெற்றிப்படம் எந்திரன். அதைத் தொடர்ந்து அதே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலர் நடித்து உருவாகி வரும் படம் 2.0. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயார்த்து வருகிறது.

fan-made-poster-of-rajinikanth-s-enthiran-2-0_145250883740

சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முடிந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. முழுமையான, 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக உள்ளது. ஆகவே தற்போது அதற்கான தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த தீபாவளிக்கே வெளி வரும் என திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் பணிகள் முழுமை அடையாததால் தீபாவளிக்கு வெளியிட முடியவில்லை.

இந்நிலையில் தற்போது 2.0 படம் வரும் 2018 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Response