விஜயின் ‘மெர்சல்’ பட சிங்கிள் டிராக் டீசர் வெளியானது

aala
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய் பிறந்தநாளின் போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது, ஆளப்போறான் தமிழன் என்று தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்று பிற்பகல் 12 மணிக்கு ‘மெர்சல்’ சிங்கிள் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Response