அமெரிக்காவிலும் விஜயின் ‘மெர்சல்’

kajal 2
ரஜினி, கமல் படங்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் பெரிய அளவில் தமிழ் படங்களுக்கு வரவேற்பு உள்ளதென்றால் அது நம் தளபதி விஜய் நடித்த படங்களுக்குத்தான். அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் இந்த ‘மெர்சல்’ படத்திற்கும் வெளிநாடுகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனால், ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்குவதில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், இப்படத்தின் யுஎஸ்ஏ ரைட்ஸை ‘அட்மஸ்’ என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களை வாங்கி அமெரிக்காவில் தங்களது சொந்த பேனரிலேயே வெளியிடும் இந்நிறுவனம், முதன்முறையாக யு.எஸ் தமிழ் எல்.எல்.சியுடன் இணைந்து ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Leave a Response