இனி அரசு பள்ளிகளிளும் எல்கேஜி வகுப்பு ஆரம்பம்…

l k g
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசுபள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வில்லிவாக்கம் ரங்கநாதன் (திமுக) பேசுகையில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசு சார்ந்த ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் மழலையர் பள்ளிகளை துவக்க வேண்டும். மழலையர் ஆங்கில வழி கல்வியை நீட் தேர்வை சந்திக்கும் வகையில் குழந்தைகளை தயார் செய்யும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் மழலையர் கல்வியை ஒவ்வொரு கிராமங்களில் இருந்து நகரங்கள் வரையில் அரசு பள்ளிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், அங்கன்வாடிகள் மூலமாக மழலையர்களுக்கு கல்வி கற்று கொடுத்து கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி என்று சொல்லப்படுகின்ற கல்விக்காக பல பேர் கடன்களை வாங்கி தவித்துக் கொண்டிருக்கிற நிலை இருக்கிறது என்பதை அரசு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அதை எப்படி மாற்றியமைக்கலாம். எப்படி மழலையர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியை தரலாம் என்பதை அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. நடுநிலை, மேல்நிலைப்பள்ளியை பற்றி இங்கே உறுப்பினர் சொன்னார். அதற்காக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விரைவில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.

* பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் நர்சரி மற்றும் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
* 13 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் மற்றும் 48 கல்லூரிகள் கம்ப்யூட்டர் வசதியுடன் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதற்காக இலவச இணையதளவசதி செய்து கொடுக்கப்பட உள்ளது.

Leave a Response