மாணவர்களுக்கு தனிச்சேனல் , 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்..!

2019-2020கல்வியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது .இந்த தனிச்சேனல் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்விமுறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று கூறினார்.

“6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 7,000 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன்கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

மேலும், 2019 -20 கல்வியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Leave a Response