கோயில் குளத்தில் கிடைத்த நான்கு ஐம்பொன் சுவாமி சிலைகள்….

samayam
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருமூலஸ்தானம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற தூர்வாரும் பணியின்போது, நான்கு ஐம்மொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

நான்கு அடி உயரத்தில் பீடத்துடன் நடராஜர் சிலை, மூன்று அடி உயரத்தில் இரு அம்மன் சிலைகள் மற்றும் மூன்று அடி உயரத்தில் ஒரு பெருமாள் சிலை ஆகியவை கிடைத்துள்ளன. இவை குளத்திலிருந்து எடுக்கப்பட்ட இடத்தில் மட்டும் மணல் இருந்திருக்கிறது.

சிலைகள் கண்டெடுக்கப்பட்டது பற்றி காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ஜெயந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அதிகாரிகளுடன் நேரில் வந்து சிலைகளைப் பார்வையிட்டார்.

நான்கு சிலைகளையும் பொதுமக்கள் திருமுழுக்காட்டி வழிபட்டனர். பின்னர், சிலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவகத்திற்கு கொண்டுசென்று பாதுகாக்கப்படுகிறது. மேலும், இச்சிலைகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response