ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க பள்ளிகளுக்கு தடையில்லை – அமைச்சர் திடீர் அறிவிப்பு ..

இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் தான் இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு அறிவித்தால் தான் உறுதியாக தெரியவரும். இந்த சூழலில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்வர் தலைமையிலானஅரசு பல்வேறு பணிகளை செயல்பட்டு வருகிறது. எல்லா பணிகளிலும் முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. பள்ளிகல்வித்துறை சார்பாக புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இப்படி அறிவித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தக்கூடாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Response