காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது. அதைத் தொடர்ந்து தினசரி வாகனங்களில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு 3ஆம் நாள் முக்கிய விழாவான ‘கருட சேவை’ கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆட்சியர் பொன்னையா, சட்ட மன்ற உறுப்பினர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த தேர் அப்பகுதியின் 4 ராஜவீதிகளில் உலா வந்து பிற்பகலில் நிலைக்கு திரும்பும். அதைத் தொடர்ந்து மாலை 6 மணி வரை தேரில் வீற்றிருக்கும் பெருமாளை பொதுமக்கள் தரிசித்தபின், பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார். வரதராஜ பெருமாளின் தேர் திருவிழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சியில் குவிந்துள்ளனர்.