மீண்டும் இணையும் “கயல்” படக்குழுவினர்…

WhatsApp Image 2017-06-06 at 12.26.54 PM
பிரபு சாலமன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டில் வெளியான கயல் திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்த புதுமுக நடிகர்களான சந்திரன், ஆனந்தி ஆகியோர் அறிமுகமாகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். அத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் கயல் ஆனந்திக்கும், சந்திரனுக்கும் பெரும் வெற்றி வாய்ப்பினை தந்தது. அதே போல் மீண்டும் ஒரு வெற்றி வாப்பினை கிட்டுவதற்காக பிரபு சாலமனின் “காட் பிக்சர்ஸ்” தயாரிப்பில் சாட்டை பட இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில் “ரூபாய்” படத்தில் கயல் சந்திரன் மற்றும் கயல் ஆனந்தியும் நடித்துள்ளனர்.

இப்படம் இம்மாதம் (ஜூன்) வெளியிடப்படுகிறது. இந்த படத்தை “ஜெ.கே. கிரியேஷன்ஸ்” தயாரிப்பாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் மற்றும் ஆர்.பி.கே. எண்டெர்டெய்ன்மண்ட் இணைந்து தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.

இப்படத்திற்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுத D.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரப்பினை பெற்ற்றுள்ளது. இதன் காரணமாக இப்படத்தின் இசை உரிமையானது முன்னரே ஒரு சிறந்த விலைக்கு ஒரு முன்னணி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

இப்படம் சென்னை இண்டர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பிரத்யேகமாக ரிலீசுக்கு முன்னரே திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தை பார்த்தவர்கள், பணத்தின் மீதுள்ள ஆசைதான் அனைத்து தீமைகளுக்கும் வேர் என்பதை இயக்குனர் மிக அழகாக கமர்ஷியல் பாணியிலும், காதலின் உச்சத்திலும் படமாக்கியுள்ளார் என தெரிவித்தனர்.

இப்பட்டத்தின் கிளைமேக்ஸ், நிச்சயம் மக்களின் மனதை கொள்ளை கொள்ளுமளவு பாதிக்கும் என இப்படத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
WhatsApp Image 2017-06-06 at 12.26.54 PM

WhatsApp Image 2017-06-06 at 12.26.58 PM

WhatsApp Image 2017-06-06 at 12.26.55 PM

WhatsApp Image 2017-06-06 at 12.26.56 PM

WhatsApp Image 2017-06-06 at 12.26.57 PM

WhatsApp Image 2017-06-06 at 12.26.58 PM (1)

Leave a Response