மறைந்த தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன்தான் நம்ம ராணா. இந்நிலையில் இவர் பிறந்த நாள் என்பதால் இன்று தான் நடித்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் ராணா.
அதவாது தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி என பல மொழிகளிலும் படங்களை தயாரித்தவர் டி.ராமா நாயுடு. தமிழைப்பொறுத்தவரை சிவாஜியின் வசந்தமாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா மற்றும் கைநாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த டி.ராமாநாயுடுவின் பேரன்தான் பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி.
இவர் தற்போது நேனே ராஜூ நேனே மந்திரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தேஜா இயக்கி வரும் இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக காஜல்அகர்வால், கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடியில்தான் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று (ஜூன்-6) வெளியாகியுள்ளது.