கிறிஸ்துமஸ் தினத்தில் மோதும் 3 படங்கள்..!

மலையாளத்தில் மட்டுமல்ல, நமது தமிழ்சினிமாவும் கூட கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதிக அளவில் படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டும். காரணம் கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து புதுவருட பிறப்பு வரை கிடைக்கும் எட்டு நாட்கள் விடுமுறைதான்.

இதில் எத்தனை படங்கள் ரிலீசானாலும் படங்கள் நன்றாக இருந்ததாக கேள்விப்பட்டாலோ, அல்லது பெரிய நடிகர், இயக்குனர்களின் படங்களாக இருந்தாலோ பெரும்பாலான ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் போட்ட காசை சிந்தாமல் சிதறாமல் இந்த ஒரு வாரத்தில் ஆள்ளிவிடாலாம் என்பது தயாரிப்பாளர்களின் கணிப்பு..

அந்தவகையில் இந்த கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆர்யா நடித்துள்ள மீகாமன், விக்ரம் பிரபுவின் ‘வெள்ளக்கார துரை’ மற்றும் பிரபுசாலமனின் ‘கயல்’ என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. லிங்கா அதற்கு முன்னதாகவே 12 நாட்கள் பாய்ச்சல் காட்டிவிடுவதால் அதன் ஜுரம் சற்றே குறைந்துவிடும் என்பதும் இந்த மூன்று படங்களின் ரிலீஸுக்கு ஒரு முக்கிய காரணம்.