தீபாவளிக்கு திரைக்கு வரும் எனிமி

பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “எனிமி”.

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் “எனிமி”. இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

‘மினி ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாடல்களை தமன் இசையமைக்க, RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார். விவேக் மற்றும் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர். எனிமி படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .

Leave a Response