சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சி.வி.குமாரின் படங்கள்..!

12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர்-18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எட்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் 12  தமிழ் படங்கள் உள்பட  170   படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழகத்தில் முக்கிய திரைப்பட விழாவாக கருதப்படும் இந்த விழாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் ரமேஷ் இயக்கத்தில் வெளிவந்த “தெகிடி” திரைப்படமும், விஷ்ணு மற்றும் நந்திதா நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த “முண்டாசுப்பட்டி” திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.

2012 ஆம் ஆண்டு இவர்கள் தயாரித்த ‘அட்டகத்தி’ மற்றும் ‘பீட்சா’ திரைப்படமும், 2013 ஆம் ஆண்டு ‘சூதுகவ்வும்’ திரைப்படமும் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்தெடுக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.