பிரபு சாலமனின் அடுத்த படம் ‘ரெட் ஜெயண்ட்டு’க்கா..?

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வந்தால் அது லீப் வருடம்.. அதேபோல இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வந்தால் அது பிரபுசாலமன் படம் என்கிற மாதிரி ஒவ்வொரு ஹிட்டிற்கும் இரண்டுவருட இடைவெளி விடுகிறார் பிரபுசாலமன். அந்த வகையில் மைனா, கும்கி வெற்றியை தொடர்ந்து அவருடைய அடுத்த படைப்பான கயல் தயாராகிவிட்டது.

வரும் டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக ரிலீசாகவும் உள்ளது. இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பிரபுசாலமனின் ‘மைனா’வை ரெட் ஜெயண்ட் தான் வெளியிட்டது.

இதுபற்றி பிரபுசாலமன் தரப்பில் கேட்டால், “ஏற்கனவே ‘மைனா’ வெளியான நேரத்தில் இருவரும் இணைந்து படம் பண்ண முயற்சி நடந்தது. ஆனால் அப்போது சில காரணங்களால் அது அப்படியே நின்றுவிட்டது. தற்போது ‘கயல்’ ரிலீசை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தை பற்றியே முடிவு செய்யவேண்டும்’ என்கிறார்கள்.