ஜீவா படத்தில் மீண்டும் ‘கெஸ்ட் ரோல் கிங்’ ஆர்யா..!

இன்றைக்கு தமிழ்சினிமாவில் இருக்கும் முன்னணி கதாநாயகன்களில் எந்த வித ஈகோவுமில்லாமல் ‘கெஸ்ட் ரோலில் நடித்து வருபவர் ஆர்யா தான்.. கெஸ்ட் ரோலில் நடிப்பதால் தனது மதிப்பும் மார்க்கெட்டும் ஒருபோதும் குறையாது என்பதை மனதில் வைத்திருக்கும் ஆர்யாவை ‘கெஸ்ட் ரோல் கிங்’ என்றே சொல்லலாம்.

இந்த வருடம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ஜீவா ஆகிய படங்களில் நடித்த ஆர்யா, தற்போது அவரது நண்பரான ஜீவா நடித்துவரும் ‘ரோமியோ’ ஜூலியட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருமே சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் ஒருவருக்கொருவர் நட்பு ரீதியாக கெஸ்ட் ரோலில் நடித்தவர்கள் தான்.

எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த  லட்சுமண் என்பவர் இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் தான் ‘ரோமியோ-ஜூலியட்’. 2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி. இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது. டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் பூனம் பஜ்வாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.