லிங்குசாமியை தொடர்ந்து ரசிகர்களிடம் சிக்கிய பிரபுதேவா..!

அஞ்சான் படம் வெளியானபோது இயக்குனர் லிங்குசாமியை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலவிதமாக கிண்டலடித்து, அவரை மன வேதனைக்கு ஆளாக்கினார்கள். இப்போது அதேபோன்றொரு சூழ்நிலை தான் நம்ம பிரபுதேவாவுக்கும் ஏற்பட்டுள்ளது..

கடந்தவாரம் பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘ஆக்சன் ஜாக்சன்’. இந்த படம் பாலிவுட்டையே புரட்டிப்போடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், பாலிவுட் ரசிகர்கள் இந்தப்படத்தை புரட்டிப்போட்டுள்ளனர்..

மோசமான கதை, அதற்கு பொருந்தாத திரைக்கதை, அர்த்தமார்ற வசனங்கள் இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக இடம்பெற்று இருப்பதால் தான் படம் தோல்வி அடைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவாவும் “எனக்கு நேர்மையாகத்தான் படத்தை இயக்கினேன், ஆனாலும் இது எனக்கு மோசமான தோல்வி தான்” என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.