சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்…

சில நாட்களுக்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு மாடுகள் விற்பனை செய்ய சில சட்ட திருத்தங்களும், இறைச்சிக்கு மாடுகளை வெட்டவும் தடை செய்து ஒரு புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில் சந்தையில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கு தடை விதித்தது. இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ள நரேந்திர மோடி தலைமை வகிக்கும் இந்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று ‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’ சார்பாக விவசாயிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அற்கசு அலுவலகங்கள் இருக்கும் ‘சாஸ்த்ரி பவன்’ எதிரில் இன்று காலை ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தின் போது, விவசாயிகள் மத்திய அரசு விதித்துள்ள மாடு விற்பனைக்கான புதிய சட்டத்தின் நகலை எரித்து போராட்டம் நடத்தினர். எப்போதும் போல் காவல் பாதுகாப்பிற்கு இருந்த காவல் துறையினர் விவசாயிகள் கொளுத்திய சட்ட நகலை அனைத்து விட்டு போராட்டக்காரர்களை அப்புரவுப்படுத்தினர்.
IMG_2544

IMG_2550

IMG_2551

IMG_2552

IMG_2553

IMG_2556

IMG_2557

IMG_2558

Leave a Response