மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்…

Vallur-Thermal-Power-Plant1C
திருவள்ளூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3-வது அலகில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் மற்ற அலகுகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கையாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 2வது அலகில் எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் கூறியதையடுத்து, மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மேலும், 3வது அலகில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 3-வது அலகில் பழுதுகள் சரிப்பர்க்கப்பட்டு, இன்னும் 2 மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response