மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்பாட்டம்….

மத்தியில் ஆட்சி செய்யும் ‘பாரதிய ஜனதா கட்சி’ ஆட்சியை கண்டித்து இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் ‘சாஸ்த்ரி பவன்’ எதிரில் ‘திராவிடர் விடுதலை கழகம்’ அதன் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களின் தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடத்தியது. ஆர்பாட்டத்தின் போது, தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மத்திய அரசு அறிமுகபடுத்தியுள்ள ‘நீட்(NEET)’ தேர்வு தேவையற்றது, மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், விவசாய நிலங்கள் பல வறண்டு கிடக்கின்றன, அதற்க்கு நீர் பாசன வசதியை செய்து தரவேண்டிய மத்திய அரசு, புனித நீர் என்று கருதி கங்கை நதியை சீர் செய்ய ரூ.20000 கோடி செலவழிகின்றனர் என கோஷம் முழங்க ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டக்காரர்கள் அவர்களாகவே ஹிந்தி மொழியில் பொறிக்கப்பட்ட வாசகங்களை கொண்ட பேனரை கொண்டு வந்தனர். பின்னர் அந்த ஆர்பாட்டக்காரர்கள் அந்த பேனரில் இருந்த ஹிந்தி வாசகங்களை அவர்கள் கொண்டு வந்த கருப்பு சாயத்தை கொண்டு அழித்தனர். அப்போது தமிழகத்தில் ஹிந்தியை திணிக்காதே என கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் குழந்தைகள் சிலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நேரம் கழித்து காவல்துறையினர் ஆர்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.IMG_2486

IMG_2492

IMG_2509

IMG_2511

IMG_2515

IMG_2528

IMG_2530

IMG_2531

IMG_2538

Leave a Response