9 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர் கைது…

sexual
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரபரப்பான நேரத்தில் 9 வயது சிறுவனை 24 வயது இளைஞர் பாலியல் தொல்லைக் கொடுத்ததை தான் நேரில் பார்த்ததாக இளைஞர் ஒருவர் சாட்சி கூறியதன் அடிப்படையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனில் ஏன்கே(24) மீது பாலியல் குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பம், பாதுகாப்பின்றி தன்னை போன்று ஏராளமானோர் ரயில் நிலைய பாலத்தில் வசித்து வந்ததாகவும், அவர்களில் சிலர் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் சாட்சி கூறிய இளைஞர் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது அனில் மது அருந்தியிருந்ததால் பயந்துக் கொண்டு சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. மறுநாள், சிறுவனை வேறு இடத்துக்கு கொண்டு சென்ற அனில், மீண்டும் பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதனை தட்டிக்கேட்டதற்கு தன்னை மிரட்டியதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறுவனை காப்பாற்ற முடியாமல் தவித்தபோது, சாலையோரம் சாப்பாட்டுக்கு கடை நடத்தி வந்தவரிடம், சிறுவன் பாலியல் தொல்லைக்கு பாதிக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட அனில், கைது செய்யப்படும் போது கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது போதை தெளிந்ததும் நீதிமன்றம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் அனிலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

Leave a Response