சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறியுள்ள இளைஞர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வருகிறார். அ’ருகில் இருந்தவர்கள் எடுத்துக் கூறியும் அந்த இளைஞர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் செல்போன் டவரில் ஏறியுள்ள இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அவரது கோரிக்கை என்ன எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இளைஞரின் தற்கொலை மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் காண ஏராளமான மக்கள் கூடியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.