தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் கிராமத்தில் கபடி விளையாட கொள்ளிடம் ஆற்றை கடந்து வந்த போது கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகம் ஏற்பட்டதால் சரவணன், பிரத்தீவிராஜன், தினேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் சுமார் 10 மணி நேரமாக தவித்தனர்.
இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தனர்பின்னர் தொடர்ந்து இயந்திர படகு வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்குபின் பத்திரமாக மீட்டனர்.