எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது எம்எல்ஏ செய்த வேலை!

Desktop18

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்று அதிமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் என இந்த விழாக்களில் பங்கேற்று வருகின்றனர்.

இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த விழாவுக்கு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. இதை நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

large_capturecb

இந்நிலையில் கோவையில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தொண்டர்கள் அதிக அளவு தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மது மற்றும் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

எனினும் இந்த குற்றச்சாட்டை எம்எல்ஏ கனகராஜ் மறுத்துள்ளார். பேருந்துகளுக்கு டீசல் போடுவதற்காக பணம் கொடுத்ததாகவும், பெட்டிகளில் தண்ணீர் பாக்கெட்டுகளே இருந்ததாகவும் எம்எல்ஏ விளக்கமளித்துள்ளார்.

 

Leave a Response