காவல்துறையின் எச்சரிக்கை மெரினாவில் கூட்டம் போடகூடாது…

police1
சென்னை மாநகர சட்ட விதியை மீறி மெரினா கடற்கரையில் கூட்டமாக கூடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தியில், ” சென்னை பெருநகரில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41ன் படி காவல் துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஏற்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கூட்டங்கள்/போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்பினருக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

2003 ஆண்டு முதல் கடற்கரைகளின் அழகினை பாதுகாக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது அனைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

சென்னை பெருநகரில் சென்னை மாநகர காவல் சட்ட விதி 41 அமலில் உள்ள நிலையில், ஏற்பளிக்கப்படாத இடமான மெரினா கடற்கரையில் விதிமுறையை மீறி குழுமவோ அல்லது கூட்டங்கள் நடத்தவோ முற்படுவது சட்டவிரோதமாகும். அத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response