ஜப்பானில் வினோதத் திருவிழா…

japan
மக்களே நம் நாட்டில் திருவிழா என்றால் பூரிபூட்டும் வகையில் இருக்கும், இல்லை காவெடி எடுப்பதும் , வேல் குத்துவது இது கண்களை மிரள வைக்கும் அளவில் இருக்கும் ஆனால் ஜப்பானில் கொண்டாடும் திருவிழாவை பற்றி கேட்டால் நீங்களே சிரித்துவிடுவிர்கள்.

அதாவது என்ன வென்றால் டோக்கியோவின் மேற்கே சாகமிஹாராவில் உள்ள கமேகைக்கே ஹச்சிமங்கே கோயிலில் நடைபெற்ற இப்போட்டியில் 2 சுமோ வீரர்கள் குழந்தைகளை கையில் ஏந்தி அவர்களை மிரட்டி அழ வைப்பார்கள். குழந்தைகள் அழாமல் இருந்தால், அவர்களை அசைத்து அழுவதற்கு ஊக்குவிப்பார்கள். சுமோ வீரர்கள் மூலம் குழந்தைகளை அழ வைத்தால் அக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும்.

குழந்தை அழுவதை காண முடியாவிட்டாலும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வதாக ஜப்பானிய தாய்மார்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் அழுகை தீய சக்திகளை விரட்டி அவர்களை பாதுகாப்பதாக கோயில் பூசாரி ஒருவர் கூறியுள்ளார்.

சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் இப்போட்டி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக ஜப்பானியர்கள் கருதுகின்றனர்.

இந்த வருடம் நடைபெற்றதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.

Leave a Response