அதர்வாவும் நான்கு கதாநாயகிகளும்…

GGSR
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் விரைவில் வெளிவரவிற்கும் திரைப்படம் “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்”. இப்படத்தை ஓடம் இளவரசு இயக்க, அதர்வா கதாநாயகனாகவும் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கசான்றா, பிரணீதா, அதீதி போஹங்கர் என நான்கு நாயகிகள் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதைக்கு நான்கு நாயகிகள் தேவைப்படுவதால் தான் இவர்கள் நால்வரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்தான் கதாநாயகன், இவர் தான் கதாநாயகி, இவர் தான் காமெடியன் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு நடிகருடைய கதாபாத்திரமும் சுவாரசியமாக இருக்குமாம். அதர்வாவின் நீண்ட நாள் கனவான ரொமாண்டிக் காமெடி கதாபாத்திரம், இப்படத்தின் மூலமாக பூர்த்தி செயப்பட்டுள்ளதாக சொல்கிறார் படத்தின் இயக்குனர் ஓடம் இளவரசு.

இவர்களோடு இப்படத்தில் ‘பரோட்டா’ சூரி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், T.சிவா, மயில்சாமி, சோனியா போஸ் வெங்கட், பிக் பிரிண்ட் கார்த்திகேயன், தீனா, லோகேஷ் & கோபி, ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர். நேகாமாலிக் இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதற்வாவுடன் சூரி முதல்முறையாக இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒளிப்பதிவை M.ஸ்ரீசரவணன் கையாள, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தை ஓடம் இளவரசு இயக்க, அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்துள்ளார்.

Leave a Response