வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத ஓட்டுனர் மீது தாக்குதல்: திருச்சி

Trichy Temporary Bus Driver Assaulted
திருச்சியில் பேருந்து இயக்குவதற்காக வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனரை சிஐடியு தொழிர்ச்ச்னகதினர் ஓட ஓட அடித்து விரட்டினர் தாக்கினர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.

திருச்சியில் 90% அளவு பேருந்துகள் பணிமனையில் இருந்து வெளியேறாத நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் பேருந்து ஓட்டுனர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை அரசு போக்குவரத்து ஊழியர்கள் தடுத்தனர். அதனையும் மீறி பேருந்தை இயக்கிய தனியார் ஓட்டுநர் ஒருவரை அவர்கள் பெயர்ப் பலகையால் சிஐடியு தொழிற்சங்கத்தினர் அவரை தாக்கி ஓடஓட விரட்டினர்.

Leave a Response